புதுடெல்லி:இஸ்லாம் இந்தியாவுக்கும், இந்தியா இஸ்லாத்திற்கும் அளித்த பங்களிப்புகளை எடுத்துக்கூறி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சவூதி மன்னருக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சர்களின் அவையான மஜ்லிஷ் ஷூராவில் உரை நிகழ்த்தினார்.
மேலும் அவர் தமது உரையில், "இஸ்லாம் இந்திய தேசியம் மற்றும் கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத பகுதி. இஸ்லாமிய கலாச்சாரத்தின் எல்லா துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளது. இஸ்லாமிய-அரபு கல்வித்துறையில் மதிப்புமிக்க சேவைகளை இஸ்லாமிய கல்விக் கலாச்சாலைகள் வழங்கியுள்ளன.
நமது தேசத்தின் 16 கோடி முஸ்லிம்கள் தேசத்தை நிர்மாணிப்பதில் பங்குவகிக்கவும் வாழ்க்கையின் எல்லாத் துறைகளில் சிறந்தும் விளங்குகின்றனர். தேசத்தின் பன்முக கலாச்சாரத்தில் எங்களுக்கு பெருமை உண்டு." இவ்வாறு அவர் கூறினார்.
எல்லா ஆண்டுகளிலும் ஹஜ்ஜிற்காகவும், உம்ராவிற்காகவும் இந்தியா விலிருந்து வரும் புனித யாத்தீர்கர்களுக்கு அளிக்கும் வரவேற்பிற்கு சவூதி அரேபிய அரசுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நன்றியை தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இந்தியக் கலாச்சாரத்தை இஸ்லாம் வளப்படுத்தியது: பிரதமர் மன்மோகன் சிங்"
கருத்துரையிடுக