ஸ்ரீநகர்:கஷ்மீரின் சிங்கம் என்று போற்றப்படும் மறைந்த ஷேக் அப்துல்லாஹ்வையும் அவருடைய மகனும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபாருக் அப்துல்லாஹ் மற்றும் ஃபாரூக் அப்துல்லாஹ்வின் மகனும் கஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லாஹ்வையும் "த்ரீ இடியட்ஸ்" என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டருக் கெதிராக தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள் கடும் எதிர்ப்புடன் கூடிய போராட்டத்தை நடத்தினர்.
இச்சம்பவத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு பங்குண்டு என்று குற்றஞ்சாட்டி போராட்டக்காரர்கள் மஹ்பூபா முஃப்தியின் உருவப் படத்தை தீயிட்டுக் கொழுத்தினர்.
பிரதாப் பார்க்கில் தேசிய மாநாட்டுக் கட்சியின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய 500 பேர் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். கட்சித் தலைவர்களை அவமதித்த சம்பவத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தப்பிக்கவியலாது எனவும் மஹ்பூபா முஃப்தி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீர்:ஷேக் அப்துல்லாஹ் குடும்பத்தை த்ரீ இடியட்ஸ் என்று சுவரொட்டி ஒட்டியதற்கு கஷ்மீரில் போராட்டம்"
கருத்துரையிடுக