வாஷிங்டன்:அமெரிக்காவில் இளைஞர்களுக்கிடையில் இண்டர்நெட் செய்தி ஊடகத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பத்திரிகைகளை முந்தித்தான் இச்சாதனையை இண்டர்நெட் பெற்றுள்ளது.
உள்ளூர் தேசிய டெலிவிஷன் அலைவரிசைகள் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன. 2259 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட கருத்து ஆய்வில் 78 சதவீதம் பேர் தினந்தோறும் செய்தியை அறிந்துக் கொள்வதற்காக உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளை நாடுகின்றனர். 73 சதவீதம் பேர் தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளை நாடுகின்றனர். இண்டர்நெட்டை நாடுவோர் 51 சதவீதமாகும்.
ஆனால் பத்திரிகையை நாடுவோர் வெறும் 17 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் 99 சதவீதம் ஆட்களும் செய்திகளை அறிவதற்காக ஊடகங்களை நாடுகின்றனர். 33 சதவீதம் பேர் செல்ஃபோன் வழியாக செய்திகளை அறிகின்றனர். 54 சதவீதம் பேர் ரேடியோவையும் செய்தியை அறிவதற்கு பயன்படுத்துகின்றனர்.
இந்த கருத்தாய்வை ஃப்யூ ரிசர்ச் சென்டர் ஆன் சர்வே என்ற நிறுவனம் நடத்தியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்காவில் செய்தியை அறியும் பயன்பாட்டில் இண்டர்நெட் பத்திரிகையை முந்தியது"
கருத்துரையிடுக