வாஷிங்டன்:கடந்த ஜனவரி 20 ஆம் தேதி துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மொஸாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்ட ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் 26 பேர்களில் இருவர் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கொலையாளிகளில் இருவரில் ஒருவர் ஐரிஷ் பாஸ்போர்ட்டிலும், மற்றொருவர் பிரிட்டன் பாஸ்போர்ட்டிலும் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். ஒருவர் கொலை நடந்த மறு தினமும், மற்றொருவர் பிப்ரவரி மாதத்திலும் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அமெரிக்காவில் எங்குள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அப்பத்திரிகை கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மப்ஹூஹ் கொலை: கொலையாளிகளில் இருவர் அமெரிக்காவிற்கு தப்பியோட்டம்"
கருத்துரையிடுக