6 மார்., 2010

எங்களது அணுகுண்டுகள் இளைஞர்களும், விளையாட்டு வீரர்களுமே: ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்

டெஹ்ரான்:"எங்களுக்கு சொந்தமானது நாகரீகமும், கலாச்சாரமுமாகும். அணுகுண்டுகள் தேவையில்லை" என ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, "நான் மீண்டும் கூறுகிறேன் எங்களது அணுகுண்டுகள் இளைஞர்களும், விளையாட்டு வீரர்களும் தான். ஒரு நாட்டுக்கு தேவையானது மன உறுதியும், புத்திசாலித்தனமும், கலாச்சாரம் மற்றும் நாகரீகமுமாகும். அல்லாமல் அணுகுண்டுகள் அல்ல. யார் தாழ்வு மனப்பான்மையினால் பாதிக்கப்பட்டுள்ளார்களோ மேலும் நாகரீகம் மற்றும் வரலாற்றுப் பின்னணியின் பற்றாக்குறை எவருக்கு உள்ளதோ அவர்களுக்குத்தான் அணுகுண்டுகள் தேவை."

அஹ்மத் நிஜாத் ஈரானின் உடற்பயிற்சித்துறை தலைவரான அலீ சயீத்லுவிடம் ஏற்கனவே இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான வரம்புகளை நீக்கிவிட்டு போதுமான சிறந்த பயிற்சியாளர்களையும், தொழில் நுட்ப பணியாளர்களையும் நியமித்து பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி உற்சாகமடையச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு ஈரானின் விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் 5 மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். "நாங்கள் ஆசிய சாம்பியன்ஷிப்பை அடைவதை மட்டுமல்ல உலக சாம்பியனாகவும் ஆக விரும்புகிறோம்" என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் அஹ்மத் நிஜாத்.
"சாம்பியனாக வேண்டுமானால் அதற்கு போதுமான உழைப்பும், கடின முயற்சியும் தேவை" என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எங்களது அணுகுண்டுகள் இளைஞர்களும், விளையாட்டு வீரர்களுமே: ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்"

கருத்துரையிடுக