7 மார்., 2010

துபாயில் சர்வதேச இஸ்லாமிய கண்காட்சி "ஸால்வேசன்(விமோசனம்)"

துபாய்:துபாய் இஸ்லாமிக் அஃபர்ஸ் அன்ட் சாரிடபிள் ட்ரஸ்ட் உறுதுணையோடு துபாயில் சர்வதேச இஸ்லாமிய கண்காட்சி நடைபெற உள்ளது.

மார்ச் மாதம் 18,19,20 ஆகிய தினங்களில் ஏர்போர்ட் எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் துபாய் பீஸ் கன்வென்சனின் ஒரு பகுதியாக ஸால்வேசன்(விமோசனம்) என்ற பெயரில் கண்காட்சிக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

துபாய் ஆட்சியாளரின் மனைவி ஷேகா ஹின்த் பின்த் மக்தூம் பாதுகாவலாரக உள்ள அல்கூஸ் அல்மனார் ஸ்டடி சென்டர்தான் துபாய் சர்வதேச பீஸ் கன்வென்சனை தலைமையேற்று நடத்துகிறது.

சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் உலகத்திலிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உலகின் முக்கிய நகரமான துபாயில் முதன்முதலாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உலக முழுவதும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தும் காலக்கட்டத்தில் இஸ்லாத்தின் எதார்த்த நிலையை மனித சமூகத்திற்கு எடுத்துக் கூறுவதும் அதுவழி உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலுடன் இஸ்லாத்தை அணுகுபவர்களுக்கு அவர்களுடைய தவறான புரிந்துணர்வை மாற்ற இயலும் என இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

யூசுஃப் எஸ்டஸ், அப்துல் ரஹீம் க்ரீன், அஹ்மத் ஹாமித், ஹுஸைன் யீ, டாக்டர்.ஹாமித் ஹுஸைன், எம்.எம்.அக்பர், யாஸிர் காதி, ஷேக் ராகிஹ் ஆகியோர் உள்ளிட்ட அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, குவைத், இந்தியா ஆகிய நாடுகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மூன்று நாட்கள் நடைபெறும் பீஸ் கன்வென்சனின் அரங்கில் பல்வேறு தலைப்புகளில் உரைகளையும், ஆய்வுரைகளையும் நிகழ்த்துவார்கள்.

இவர்களுடனான விவாதங்கள் மற்றும் கேள்வி-பதில்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். பல்வேறு மொழிகளில் கவுன்சிலிங்கும் நடைபெறும்.

பீஸ் கன்வென்சனில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியான சர்வதேச இஸ்லாமிய கண்காட்சி ஏர்போர்ட் எக்ஸ்போவில் உள்ள ஒரு லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட வெஸ்ட் ஹாலில் நடைபெறும். இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட சேவைத் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்டர் ஹாலில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு அறிவு ரீதியாக விளக்கமளிக்கும் மெஸேஜ் பவிலியன் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

கருவியல், வரலாறு, புவியியல், வானவியல் உள்ளிட்ட விஞ்ஞான தகவல்களையும் உள்ளடக்கி தயார் செய்த வியப்படையச் செய்யும் கேலரிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வோருக்கு மிக்க பயனளிக்கும். கண்காட்சி அதுத் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசமாகும்.

இம்மாதிரியான நிகழ்ச்சி கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய இந்திய நகரங்களிலும் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. நம்பிக்கை மற்றும் வட்டியில்லாத போன்ற நற்பண்புகளைக் கொண்ட சந்தையியல் கலாச்சாரமும், வியாபார முறைகளும் அறிமுகப்படுத்தும் ஹலால் பஸாரும் பீஸ்கன்வென்சனின் முக்கிய பகுதியாக இடம்பெறும்.

இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான ஹலால் தயாரிப்புகளும் கண்காட்சியும் இதில் இடம்பெறும். நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. ரோட் ஷோ, பீஸ் மார்ச், மாஸ் மெஸேஜ் காம்பயின் உள்ளிட்ட உள்ளத்தை கவரும் நிகழ்ச்சிகள் "பீஸ் கன்வென்சனின்" முன்னோடியாக துபாயின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும்.

துபாய் என்.ஏ மாடல் ஸ்கூலிலிருந்தும் ஏர்போர்ட் எக்ஸ்போ அருகிலிலுள்ள மெட்ரோ ஸ்டேசனிலிருந்தும் நிகழ்ச்சி அரங்குக்கு செல்ல வாகன வசதி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

துபாய் அவ்காஃப் பி.ஆர் பிரிவு தலைவர் அஹ்மத் ஷாஹித், நிச் ஆஃப் ட்ரூத் டைரக்டர் எம்.எம்.அக்பர், அல் மனார் சென்டர் டைரக்டர் டாக்டர் அப்துஸ்ஸலாம் மோங்கம், அஹ்மத் ஹாமித் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவல்களை தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாயில் சர்வதேச இஸ்லாமிய கண்காட்சி "ஸால்வேசன்(விமோசனம்)""

கருத்துரையிடுக