ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவில் மீண்டும் இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி நுழைந்தது மோதலுக்கு காரணமானது.
இஸ்ரேலிய ராணுவத்தை துரத்த ஃபலஸ்தீனிய முஸ்லிம்கள் கல்வீச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் ரப்பர் புல்லட்டால் சுட்டதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஜும் ஆவிற்கு பிறகு மஸ்ஜிதில் தங்கியிருந்தவர்களை துரத்துவதற்கு இஸ்ரேலிய ராணுவம் மஸ்ஜிது வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. புண்ணிய இடங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக கண்டனப் போராட்டங்களை நடத்த தயாரானவர்களை விரட்டுவதற்காக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் அக்கிரமத்தை தடுக்கமுயன்றவர்கள் மீதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மோதலைத்தொடர்ந்து கிழக்கு ஜெருசலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரத்திற்கிடையில் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய ராணுவம் அல் அக்ஸா மஸ்ஜிதிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸா மிக புண்ணியமாக்கப்பட்ட மூன்று மஸ்ஜிதுகளில் ஒன்றும், முஸ்லிம்களின் முதல் கிப்லாவுமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மஸ்ஜிதுல் அக்ஸாவில் மீண்டும் இஸ்ரேலிய ராணுவத்தின் அட்டூழியம்"
கருத்துரையிடுக