11 மார்., 2010

ஷேக் தன்தாவி மரணமடைந்தார்

ரியாத்:உலகின் பிரபல மார்க்க அறிஞரும், எகிப்தின் பிரசித்திப் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவருமான ஷேக் முஹம்மது ஸய்யித் தன்தாவி மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி....).

சவூதி அரேபியாவில் வருகை புரிந்திருந்த அவர் எகிப்திற்கு செல்லும் வழியில் விமானநிலையத்தில் வைத்து இதய அதிர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக மரணம் நிகழ்ந்தது.

தன்தாவி மதீனா பல்கலைக்கழகத்தில் குர்ஆன் ஆய்வு பிரிவு தலைவராகவும் இருந்தார். 7000 பக்கங்கள் அடங்கிய 15 தொகுதிகள் கொண்ட அவருடைய திருக்குர்ஆன் தப்ஸீர் பிரபலமானதாகும்.

1996 ஆம் ஆண்டு எகிப்து அரசு தன்தாவியை அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமித்தது. உடல் உறுப்புகள் தானம், வங்கியல், பெண்களுக்கு பொது இடங்களில் அனுமதி ஆகியவற்றைக் குறித்த அவருடைய மிதமான நிலைப்பாடு சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. நாளை(வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப்பின் மதீனாவில் அவருடைய ஜனஸா அடக்கம் செய்யப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரு பெண் உட்பட மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் தன்தாவி.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷேக் தன்தாவி மரணமடைந்தார்"

கருத்துரையிடுக