புதுடெல்லி:மத்திய ஹஜ் கமிட்டி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் முஹ்ஸினா கித்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய ஹஜ் கமிட்டி தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறையாகும். ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான 72 வயது முஹ்ஸினா கித்வாய் உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்டார்.
போட்டி மூலமாகத்தான் ஹஜ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் இப்ராஹீம் ஷேக்கை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஹஜ் கமிட்டியில் வாக்குரிமைப் பெற்றவர்கள் மொத்தம் 17 பேராகும். டெல்லி ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று மதியம் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டின் மைலாப்பூரைச் சார்ந்த அபூபக்கர் ஆரிஃபும், தற்போதைய துணைத்தலைவர் ஹஸ்ஸன் அஹ்மது துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
23 உறுப்பினர்கள் கொண்ட ஹஜ்கமிட்டியில் 5 பேர் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அண்டர் செகரட்டரிகளாவர். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. தொடர்ந்து மூன்று வருடங்கள் மனுச் செய்தும் வாய்ப்பு கிடைக்காத நபர்களுக்கு ஹஜ் செய்வதற்கு மத்திய ஒதுக்கீட்டில் வாய்ப்பு அளிப்பதற்கான கேரள ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் அங்கீகரித்தது.
வரும் ஆண்டிற்கான ஹஜ் செல்வோர்களுக்கான மனுக்கள் பெறும் தேதி அடுத்த வாரம் மும்பையில் கூடும் மத்திய ஹஜ் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹஜ் கமிட்டி தலைவராக முஹ்ஸினா கித்வாய்"
கருத்துரையிடுக