லக்னோ:முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் 3 நாள் வருடாந்திர மாநாடு உ.பி.மாநிலம் லக்னோவிலுள்ள தாருல் உலூம் நத்வத்துல் உலமாவில் துவங்கியது.
இம்மாநாட்டில் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ள கலவரத் தடுப்பு மசோதாவைக் குறித்த விவாதம் இடம்பெறும் என முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் துணைச்செயலாளர் அப்துற்றஹீம் குரைஷி தெரிவித்தார்.
போலீஸ் மற்றும் அரசின் பொறுப்பை பற்றி இம்மசோதாவில் நிர்ணயிக்காததால் அது முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால் இச்சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மதக்கலவரம் எங்கு நடந்தாலும், பாதிக்கப்படுவது முஸ்லிம்களாவர். சமீபத்தில் இயற்றப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா சமுதாயத்தைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் எல்லைக்குட்படாததால் இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது.
இஸ்லாமிய சட்டங்களுக்கு தவறான விளக்கங்களை அளிக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து கூட்டத்தில் ஆய்வுச் செய்யப்படும். ஷரீஅத் குறித்து சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு குரைஷி தெரிவித்தார்.
101 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 251 உறுப்பினர்கள் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு உள்ளனர். தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புதாரிகளின் தேர்தலும் நடைபெறும். நாளை ஐசாபாக்கில் ஈத்கா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம் தனியார் சட்டவாரிய வருடாந்திர மாநாடு துவங்கியது: கலவரத் தடுப்புச் சட்டம் முக்கிய அஜெண்டா"
கருத்துரையிடுக