வாடிகன்:அயர்லாந்தில் கத்தோலிக்க சர்ச்சுகளில் பாதிரியார்கள் சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தியது அவமானமானதும், வெறுக்கத்தக்கதுமாகும் என போப் பெனடிக்ட் கூறுகிறார்.
இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கு தேவையான கட்டளைகளை பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அயர்லாந்தில் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்த இத்தகைய பாலியல் குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு செய்திகள் வெளியாயின. இதனைத் தொடர்ந்துதான் போப் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.
சர்ச்சுகளில் நடைபெறும் இத்தகைய பாலியல் குற்றங்கள் அயர்லாந்தில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. போப்பின் சொந்த நாடான ஜெர்மனியிலும் சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் குறித்து செய்திகள் வெளியாயின. இவ்விவகாரத்தில் போப்பை தொடர்புப்படுத்தும் முயற்சிகளுக்கு வாடிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
போப்பின் பாலியல் குற்றங்களுக்கெதிரான நடவடிக்கை மற்றும் எச்சரிக்கை குறிப்புகள் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளில் நடைபெறும் கூட்டங்களில் வாசிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிறுவர்களை வன்புணர்ச்சி விவகாரம்; அவமானத்தை ஏற்படுத்தியதாக போப்"
கருத்துரையிடுக