கத்தார்:டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி சர்வதேச உலமா கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கத்தாரில் வசித்து வரும் டாக்டர் கர்தாவி நேற்று கலீஃபா டவுனில் உள்ள உமர் பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்தும் பொழுது லிபியாவில் அரப் லீக்கின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இஸ்ரேலை எதிர்த்துப்போராடும் ஃபலஸ்தீனர்களுக்கு அரப் நாடுகல் ஆதரவளிக்க முன்வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இஸ்ரேல் ஒருபோதும் ஃபலஸ்தீனர்களுக்கான தனி நாட்டை வழங்காது, இஸ்ரேலை பலம் பிரயோகித்து வெளியேற்றுவதுதான் இதற்கு ஒரேவழி. அரபு நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஃபலஸ்தீன் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பதே ஜெருசலத்தின் விடுதலைக்கு வழி வகுக்கும்.
நாங்கள் எதிர்பார்க்கிறோம் அரபு நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என.
மஸ்ஜிதுல் அக்ஸா இடிக்கப்படுவதைத் தடுக்கவும், ஜெருசலத்தை யூத பிரதேசமாக மாற்றவும் திட்டமிடும் சியோனிஸ்டுகளுக்கெதிராக போராடுவதும், ஃபலஸ்தீனை பாதுகாப்பதும் அரப் தலைவர்களின் பொறுப்பாகும்.
அரப் லீக்கின் மாநாட்டில் அவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டியது வரும். என உரை நிகழ்த்திய கர்தாவி அரபு தலைவர்கள் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காண்பிப்பதைக் கண்டித்தார்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஃபலஸ்தீனர்களுக்கான நாடு கிடைக்காது என்றார். ஏற்கனவே தான் வழங்கிய அமெரிக்க இஸ்ரேல் தயாரிப்புகளை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற ஃபத்வாவை மீண்டும் நினைவுறுத்தினார் கர்தாவி. இது உலக முஸ்லிம்களுக்கு ஃபலஸ்தீன் மக்களுக்கு உதவுவதற்கான மார்க்க கடமை என்று அவர் குறிப்பிட்டார்.
செய்தி:கல்ஃப்-டைம்ஸ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள் அரபு நாடுகளின் தலைவர்களுக்கு டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கோரிக்கை"
கருத்துரையிடுக