திரிபோலி:ஜெருசலமில் ஃபலஸ்தீனர்களுக்கான நிதி உதவியை அரப் லீக் அறிவித்துள்ளது.
அடிப்படை வசதிகளுக்கு 50 கோடி டாலர் வழங்கப்படும் என அரப் லீக்கின் செகரட்டரி ஜெனரல் அம்ர் மூஸா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
லிபியாவில் நடைபெறும் அரப் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.
ஃபலஸ்தீனர்களுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததைத் தொடர்ந்து இம்முறை நடைபெறும் அரப் லீக்கின் உச்சி மாநாட்டிற்கு ஜெருசலம் மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜெருசலமில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், குடிநீர் திட்டம், வீடு நிர்மாணம் ஆகியவற்றிற்காக நிதி உதவி அளிக்கப்படும்.
இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஃபலஸ்தீனர்களுக்கு அரப் லீக் ஒன்றிணைந்த ஆதரவை தெரிவித்துள்ளது. அரப் லீக்கின் தீர்மானத்தை ஃபலஸ்தீன் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாதுல் மாலிகி வரவேற்றார். ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்த நிதி உதவி பலம் சேர்க்கும் என அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜெருசலம் ஃபலஸ்தீனர்களுக்கு நிதி உதவி- அரப் லீக் அறிவித்தது"
கருத்துரையிடுக