நோகாசோட்:இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கு மவுரிட்டானியா தீர்மானித்துள்ளது.
இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணத் தீர்மானம், மஸ்ஜிதுல் அக்ஸாவிலும், காஸ்ஸாவிலும் ஃபலஸ்தீன் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்கள் ஆகியவற்றைக் கண்டித்து இஸ்ரேலின் தூதரகத்தை இழுத்து மூடவும், தூதரக உறவை முழுமையாக துண்டிக்கவும் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் நாஹா மிண்ட் மவ்க்னாஸ் அறிவித்துள்ளார்.
இந்த மாதம் துவக்கத்தில் இஸ்ரேலிய ராணுவம் மஸ்ஜிதுல் அக்ஸாவில் அத்துமீறி நுழைந்ததையும், தொழுகைக்கு கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து மவுரிட்டானியா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்த மாதம் 20 தேதி முதல் தூதரக உறவை துண்டிக்கவும் தொடர்ந்து தூதரகத்தை மூடவும் தீர்மானித்திருந்தது.
காஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேல் தூதர் மைக்கேல் ஆல்பலை மவுரிட்டானியா வெளியேற்றியது. மவுரிட்டானியாவின் நடவடிக்கையை ஹமாஸ் வரவேற்றுள்ளது.
இஸ்ரேலுடன் உறவைத்தொடரும் முஸ்லிம் நாடுகள் மவுரிட்டானியாவை பின்பற்ற வேண்டுமென்றும், பொருளாதார, அரசியல் தொடர்புகளை துண்டிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஃபலஸ்தீன் இன்ஃபர்மேஷன் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் தூதரகத்தை மூடுகிறது மவுரிட்டானியா"
கருத்துரையிடுக