27 மார்., 2010

இன்று பூமி தினம்

இன்று பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமை இரவு எட்டரை மணிமுதல் ஒன்பதரை மணிவரை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி மனிதர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கான உலக நிதியம் அமைப்பு நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் 100 நாடுகளில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

பூமியின் இயற்கை சுற்றுச்சூழல் அழியாமல் பாதுகாக்கவும், புவி வெப்ப அதிகரிப்பின் அபாயத்தை உணர்த்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இயற்கையுடன் இணைந்து மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள ஒன்று இந்தியா. பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் நாமும் வெளியேற்றி வருகிறோம். இந்தியாவில் மின்சாரத்தின் மூலமான கார்பன் மாசுக்கள்தான் அதிக அளவில் வெளியேறுகின்றன. அதாவது பாதி புகை மாசு மின்சாரத்தால்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் 80 சதவீத அளவிலான மின்சாரம் நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
source:எர்த் ஹவர்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இன்று பூமி தினம்"

கருத்துரையிடுக