புதுடெல்லி:மிஷ்ரா கமிஷன் அறிக்கையின் சிபாரிசுகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்புப் பேரணியை நடத்தவிருக்கிறது.
காலை 11 மணிக்கு மண்டி ஹவுசிலிருந்து ஆரம்பிக்கும் அணிவகுப்பு பேரணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத் தலைவர் எ.ஸயீத், செயலாளர் ஒ.எ.ஸலாம், ஆகியோர் தலைமைத் தாங்குவார்கள்.
ஒன்பது மாநிலங்களிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்களும் இப்பேரணியில் கலந்துக் கொள்வார்கள்.
பாராளுமன்றத்திற்கு அருகிலிலுள்ள ஜந்தர் மந்தரில் பேரணி முடிவடையும். தொடர்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர், முன்னாள் எம்.பி.செய்யத் ஸஹாபுத்தீன், இஜாஸ் அலி எம்.பி, திருமாவளவன் எம்.பி, தேஜ்சிங், டாக்டர் உதித் ராஜ், ஸஃபருல் இஸ்லாம் கான், பேராசிரியர் முஹம்மது சுலைமான், டாக்டர் ஜாண் தயாள், ஃபாதர் டொமினிக் இம்மானுவேல் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பு பேரணி"
கருத்துரையிடுக