புதுடெல்லி:போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற இஸ்ரேலியர் உள்ளிட்ட 3 நபர்கள் இந்தியா-நேபாள எல்லையில் கைதுச் செய்யப்பட்டனர்.இதர இருவர் பாகிஸ்தான், ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள்.
திறந்து கிடக்கும் இந்தியா-நேபாள எல்லை வழியாக இந்தியா-நேபாளைச் சார்ந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்காக உள்ள அதனை வேறுநாட்டவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துகின்றனர் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் செயல்படும் இயக்கங்கள் இந்தியா-நேபாள எல்லை வழியாக தீவிரவாதிகளை அனுப்ப முயற்சிக்கின்றன என்ற அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பை வலுப்படுத்த உள்துறை அமைச்சகம் இந்தியா-நேபாள எல்லையை பாதுகாக்கும் சசஸ்திர ஸீமபலி (எஸ்.எஸ்.பி)க்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தான் இஸ்ரேலியர் உள்ளிட்ட 3பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இஸ்ரேலியர் உட்பட 3 பேர் கைது"
கருத்துரையிடுக