பாக்தாத்:ஈராக்கில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் பஸ்ரா மாகாணத்தில் நூரி அல் மாலிகியின் கூட்டணியான ஸ்டேட் ஆஃப் லா வெற்றிப் பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மாகாணங்களில் 6 இல் நூரி அல் மாலிகியின் கூட்டணி முன்னிலையில் உள்ளது. மூன்று மாகாணங்களில் முன்னாள் பிரதமர் இயாத் அல்லாவியின் ஈராக்கியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அம்பார் மாகாணத்தில் போதிய முன்னணியை பெற்றுள்ளது இயாத் அல்லாவியின் கூட்டணி.தஹுக் மாகாணத்தில் குர்திஷ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
முழுமையான முடிவுகள் வெளிவர இன்னும் நாட்களாகும். மொத்தம் 18 மாகாணங்கள் ஈராக்கில் உள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் தேர்தல்:பஸ்ராவில் நூரி அல் மாலிகி கூட்டணி வெற்றி, அம்பாரில் இயாத் அல்லாவி கூட்டணி முன்னணி"
கருத்துரையிடுக