டெல் அவீவ்: பிரபல ஹமாஸ் தலைவரான மஹர் உத்தாவை கைது செய்ததாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதேசமான மேற்குகரையிலிருந்து உத்தா கைதுச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
2003ஆம் ஆண்டு 70 இஸ்ரேலியர்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர் உத்தா என்று இஸ்ரேல் கூறுகிறது. ரமல்லாவில் ஹமாஸின் ஸ்தாபகர்களில் இவர் ஒருவர் எனவும் இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
இவரது கைதுப் பற்றி ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹும் கூறுகையில், "உத்தாவின் கைது ஃபலஸ்தீன பாதுகாப்புப் படையினருக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையினருக்கும் இடையே உள்ள ஆபத்தான கூட்டணியின் பலனாகும். இவ்விருவருமே உத்தாவை வேட்டையாட விரும்பியவர்கள்."என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவரைக் கைது செய்தது இஸ்ரேல் ராணுவம்"
கருத்துரையிடுக