காந்திநகர்:குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலையின் போது முன்னாள் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 70 பேர் குல்பர்கா சொசைட்டியில் எரித்துக்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா தொடர்ந்த வழக்கில் எஸ்.ஐ.டி குஜராத் முதல்வர் மோடிக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் 11அன்று மார்ச் மாதம் 21 ஆம் தேதி எஸ்.ஐ.டியின் முன்னிலையில் ஆஜராக மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மோடி ஆஜராகவில்லை. தனக்கு சம்மன் கிடைக்கவில்லை என மழுப்பினார்.
இந்நிலையில் இன்று மதியம் எஸ்.ஐ.டி யின் விசாரணைக் குழுவினர் முன்னிலையில் ஆஜரானார். குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெய் நாராயண் வியாஸ் தெரிவிக்கையில், "சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். எஸ்.ஐ.டியின் விசாரணைக்கு முட்டுக்கட்டைப் போடவில்லை" எனக் குறிப்பிட்டார்.
சமூக ஆர்வலர் தீஸ்டா செடல்வாட் தெரிவிக்கையில், "இன்று ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியமான நாளாகும். மாநில முதல்வர் ஒருவர் நீதியை பல்வேறு முயற்சிகளால் தோற்கடிக்க முயன்ற பிறகு ஒரு விசாரணை குழுவிற்கு முன் ஆஜராகியுள்ளார்." என்றார்.
மோடி எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராவதை முன்னிட்டு அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு மோடி ஆஜர்"
கருத்துரையிடுக