மும்பை கூடுதல் டி.ஜி ஜென்ரல் கே.பி.ரகுவன்ஷி, மஹாராஷ்டிரா மாநில ஏ.டி.எஸ் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அளவிற்கு அதிகமான தகவல்களை அவர் ஊடகங்களுக்குப் பறிமாறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பதுள்ளது.
மத்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவலின் படி , தற்போது ஜாயின்ட் கமிஷ்னராக உள்ள ராகேஷ் மரியா ரகுவன்ஷியின் பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிகிறது. ரகுவன்ஷி தற்பொது சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிரேக்டராக மாற்றப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கபட்ட ராகேஷ் மரியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.ஆர்.படேலை சந்தித்து பேசினார். கூடுதல் சட்ட ஒழுங்கு கமிஷ்னர் ஹிமாசு ராய் புதிதாக நியமிக்கப்பட்ட மரியாவின் பொறுப்புகளை சேர்த்து கவனிப்பார்.
சில நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டி 2 நபர்களை ஏ.டி.எஸ் கைதுசெய்தது. இவ்விவகாரத்தில் கே.பி.ரகுவன்ஷி தேவைக்கு அதிகமான தகவல்களை ஊடகங்களுக்கு பறிமாறியதாக குற்றம்சாட்டப்பட்டு, மத்திய பாதுகாப்புத்துறை கே.பி.ரகுவன்ஷியின் இந்தப் போக்கிற்கு தகுந்த விளக்கம் அளிக்குமாறு கேட்டறிந்து, அவரை இப்பதிவியிலிருந்து நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலின் வழக்கில், ஹெமந்த் கர்கரே மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டப் பின்னர், மும்பை ஹைகோர்ட் ஏ.டி.எஸ் தலைவராக எவரும் நியமிக்கப்படாததால் கடுமையாக விமர்சித்திருந்தது. இதை தொடர்ந்துத்தான் ஜுன் 11,2009யில், ரகுவன்ஷி ஏ.டி.எஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் 1980ஆம் ஆண்டின் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், பின்னர் சி.பி.இலும், பின்னர் ஏ.டி.எஸ்யின் முதல் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source -Times of india
0 கருத்துகள்: on "ஏ.டி.எஸ் தலைவர் பதவியிலிருந்து கே.பி.ரகுவன்ஷி நீக்கம். புதிய தலைவராக ராகேஷ் மரியா நியமணம்"
கருத்துரையிடுக