பெங்களூர்:கடந்த ஞாயிற்றுக் கிழமை கிங்ஃபிஷேர் விமானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பபட்டதையடுத்து, மர்மமான அழைப்பு ஒன்று பெங்களூர் விமான நிலையத்தின் அலைபேசியில் வந்தது.
இதில் உரையாடிய அந்த மனிதர், விமானத்தில் யார் குண்டு வைத்தது என்று தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். தன் பெயர் மோகன் என்றும் மும்பையில் வசிப்பதாகவும், கிங்ஃபிஷேர் விமானத்தில் சிலர் வெடிகுண்டு வைத்ததை தான் வீடியோவில் பதிவுசெய்திருப்பதாக அவர் போலிஸ் துணை கமிஷ்னர் பாஸராஜ் மலகாட்டிவிடம் அந்த அலைபேசியில் தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோ காட்சியை ஒரு சி.டியில் பதிவு செய்திருப்பதாகவும் தகுந்த சன்மானம் அளித்தால் - தான் அதைதரத் தயாராகவுள்ளதாகவும் மோகன் தெரிவித்தாக மலகாட்டி தெரிவித்தார்.
தகுந்த சன்மானத்தை அளிப்பேன் என்று வாக்களித்ததையடுத்து, என் செல் போன் எண்களை மோகன் குறித்து கொண்டதாகவும் மலகாட்டி தெரிவித்தார். மேலும், மோகன் விரைவில் ஒரு வங்கி கணக்கினை அளிப்பார் என்றும் அதில் பெங்களூருக்கு வந்து செல்லும் பயணச் செலவினை டேபாசிட் செய்யவேண்டும் என்றும் நிபந்தனை விடுத்துள்ளார். இதையும் தான் ஏற்றுகொண்டதை தொடர்ந்து, அந்த மர்ம இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் மலகாட்டி கூறினார்.
இம்மர்ம அழைப்பை டிரேஸ் செய்ய அதிகாரிகளுக்கு பின்னர் மலகாட்டி உத்தரவிட்டார். இதற்கிடையே, கேரள போலீஸார் திருவனந்தபுரத்தில் கிங்ஃபிஷேர் ஊழியர்களுட்பட பலரை விசாரனைக்காக பிடித்துள்ளனர். இது போக, கேரளாவிலிருந்து பெங்களுர் வழியாக துபை செல்லவிருந்த 3 பயணிகளை, பெங்களூர் போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source - Siasat
0 கருத்துகள்: on "கிங்ஃபிஷேர் விமானத்தில் குண்டுவைத்தது யார் என்று எனக்கு தெரியும்"
கருத்துரையிடுக