கொச்சி நகரில் உள்ள முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும் என எஸ்.எம்.எஸ். அனுப்பிய 6 கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
கேரள மாநிலம் கொச்சியில் லஷ்கர் இ தொய்பா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொச்சி நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பலரது செல்போன்களுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கொச்சியில் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இன்னும் 2 நாட்களில் குண்டு வெடிக்கும்.
இந்த எஸ்.எம்.எஸ்.களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி வையுங்கள். இல்லையெனில் விபரீதம் நடக்கும் என கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக கொச்சி உதவி கமிஷனர் சுனில் ஜேக்கப் விசாரணை நடத்தினார். எஸ்.எம்.எஸ். பரப்பியது கொச்சியை சேர்ந்த 6 கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் விளையாட்டிற்காக எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறினர். தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
source:dinakaran
0 கருத்துகள்: on "கொச்சியில் குண்டு வெடிக்கும் விளையாட்டாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி மாணவர்கள்"
கருத்துரையிடுக