23 மார்., 2010

இன அழிவை சந்திக்கும் உயிரிகளுக்கு இணையதளம் அச்சுறுத்தலாக மாறுகிறது

தோஹா:இன அழிவை சந்திக்கும் உயிரிகள் மற்றும் தாவர வகைகளுக்கு இணையதளம் அச்சுறுத்தலாக மாறிவருவதாக கத்தர் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற இன அழிவை சந்திக்கும் உயிரிகளைக் குறித்த சர்வதேச மாநாட்டில்(Qatar conference on the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES).) கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இணையதளம் வழியாக இத்தகைய உயிரிகளின் வியாபாரம் எளிதாக முன்பை விட நடைபெறுவதால் அவ்வுயிரிகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

இணையதளம் வழியாக இத்தகைய வர்த்தகம் நடைபெறும் பொழுது வாங்குபவர் மற்றும் விற்பவரின் பெயர், விலாசம் ஆகியவை ரகசியமாக பேணப்படுவதாக விலங்குகள் நல சர்வதேச நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் போல் வுட் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இன அழிவை சந்திக்கும் உயிரிகளுக்கு இணையதளம் அச்சுறுத்தலாக மாறுகிறது"

கருத்துரையிடுக