தெஹ்ரான்:ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு அவர்களுடைய கபட முகத்தை காண்பிப்பதாக ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமினி கூறியுள்ளார்.
ஈரான் புதுவருடம் தொடர்பாக தொலைக்காட்சியில் நடத்திய உரையில் காமினி அமெரிக்காவின் இரட்டை வேடத்தை கடுமையாக விமர்சித்தார். ஒரேநேரத்தில் ஈரானை அழிப்பதற்கு சதியாலோசனை நடத்துவதும், சமாதானத்தைக் குறித்தும், நட்புறவைக் குறித்தும் பேசுவதையும் அமெரிக்கா நிறுத்தவேண்டுமென காமினி கூறினார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஈரான் மக்களுக்கு அளித்த புதுவருட வீடியோ வாழ்த்துச் செய்தியில் ஈரானுடனான பேச்சுவார்த்தைத் தொடர்வதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் காமினியின் உரை அமைந்திருந்தது. ஆனால் காமினி ஒபாமாவின் வாழ்த்துச் செய்திக் குறித்து நேரடியாக விமர்சிக்கவில்லை. அமெரிக்காவின் வார்த்தைகளில் நட்புறவு அணுகுமுறை இருந்தாலும் செயல்பாடுகளிலும் கொள்கைகளிலும் அதனைக் காண முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரான் அதிபர் தேர்தலில் ஈரான் மக்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்தது. எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறையாளர்களை சமூகசேவகர்கள் என்றுக் கூறிக்கொண்டு களமிறங்கியது. சில நேரங்களில் நரியும், ஓநாயாகவும் மாறும் அமெரிக்கா சிலநேரங்களில் அழகிய முகத்தைக் காட்டிக் கொள்கிறது என காமினி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்காவின் நிலைப்பாடு கபட நாடகம்: ஈரான்"
கருத்துரையிடுக