22 மார்., 2010

கோகோ கோலா நிறுவனத்திடம் ரூ.216 கோடி நஷ்டஈடு கோர கேரளா அரசு கமிட்டி பரிந்துரை

பாலக்காடு மாவட்டம் பிளச்சிமடாவில் உள்ள கோகோ கோலா நிறுவன தொழிற்சாலையால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட அந்நிறுவனம் ரூ.216.26 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கேரள அரசு கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இதை ஏற்க கோகோ கோலா நிறுவனம் மறுத்துள்ளது.கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கேரள அரசு அமைத்த 14 நபர் கமிட்டி இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.

இந்த தொழிற்சாலையால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், இந்த ஆலை வெளியேற்றும் திடக்கழிவால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மாசுபட்டுவிட்டதாகவும் கமிட்டி கூறியுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனிடம் கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஒரு நடுவர் மன்றததை அமைக்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்த நிறுவனத்தால் விவசாயத்துறைக்கு ரூ.84 கோடியும், நீ்ர் மாசு காரணமாக ரூ.62 கோடியும், குடிநீர் இழப்பு ஏற்பட்ட வகையில் ரூ.20 கோடியும், உடல் நலக்கேடு ஏற்படுத்திய வகையில் ரூ.30 கோடியும், கூலி-ஊதிய இழப்பு என்ற வகையில் ரூ.20 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்தக் கமிட்டி கூறியுள்ளது.இந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அறிக்கையை நிராகரித்த கோக்:
ஆனால், இந்த அறிக்கையை இந்துஸ்தான் கோகோ கோலா நிறுவனம் நிராகரித்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக கோக் கூறியுள்ளது.

இந்த ஆலைக்கு அனுமதி தரும்போது இந்த சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் என்பது கேரள அரசுக்குத் தெரியாதா?.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோகோ கோலா நிறுவனத்திடம் ரூ.216 கோடி நஷ்டஈடு கோர கேரளா அரசு கமிட்டி பரிந்துரை"

கருத்துரையிடுக