துபாய்:துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கடந்த ஜனவரி 20ஆம் தேதிக் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் அல் மஹ்மூதின் கொலையில் இஸ்ரேலியர்களுக்கு தொடர்பில்லை என்பதை நிரூபித்தால் தான் தனது வேலையை ராஜினாமா செய்வேன் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் என்று சந்தேகப்பட்டவர்களின் டி.என்.ஏ சோதனைக்கு இஸ்ரேல் தயாராக வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கொலையாளிகளின் டி.என்.ஏ சம்பவம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டிருந்தது. இத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான பரிசோதனைக்குத்தான் இஸ்ரேலிடம் கோரப்பட்டுள்ளது. வேறு எதிலும் பொய் சொல்லலாம், ஆனால் டி.என்.ஏ பரிசோதனையில் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.
"டி.என்.ஏ மாதிரிகள் எங்களிடம் உள்ளது. ஒவ்வொருவராக கைதுச் செய்யப்படும்பொழுது டி.என்.ஏ மாதிரிகளுடன் நாங்கள் ஒப்பிட்டுப்பார்ப்போம்" எனவும் அவர் தெரிவித்தார்.
"கொலையில் தொடர்புடைய 26 பேரில் பெரும்பாலோருக்கான விரல் ரேகைகள் கிடைத்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பரிசோதனையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் டி.என்.ஏ மாதிரிகளுக்கு தொடர்பில்லை எனில் எனது பதவியை ராஜினாமா செய்வேன்" என தமீமி கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வியாபார நஷ்டத்திற்காக ஹோட்டல் அதிகாரிகள் இஸ்ரேலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள். மப்ஹூஹ் கொலையில் மொஸாதின் பங்கு பற்றிய குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலை: இஸ்ரேலியர்களுக்கு தொடர்பில்லை என்று நிரூபித்தால் பதவி விலகத்தயார்: துபாய் போலீஸ் தலைவர் சவால்"
கருத்துரையிடுக