ஆப்கான் அரசு தாலிபானின் 2'வது முக்கிய பிரமுகர் முல்லா அப்துல் கனி பர்தர் உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்திக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் பாக்கிஸ்தான் அவரை கைது செய்துள்ளது.
இந்தக் கைது ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாயை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை, தாலிபான்களுடனான சமாதான பேச்சுவார்த்தையை அமெரிக்கா விரும்பவில்லையோ என்று கேள்வியை எழுப்புகிறது.
அமெரிக்கா உளவுப்பிரிவின் உதவியோடு பாக்கிஸ்தான் அதிகாரிகள் முல்லா அப்துல் கனி பர்தரை கைதுச் செய்ததை கேள்விப் பட்டவுடன் மிகவும் கோபம் அடைந்ததாக அவருடைய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பர்தர் அடுத்த மாதம் நடக்கவிருக்கின்ற மூன்று நாள் 'ஃபீஸ் ஜிர்ஹா' வில் கலந்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்" என்றார்.
0 கருத்துகள்: on "கர்சாயின் அமைதித் திட்டத்தை தகர்த்த பாக்கிஸ்தான்"
கருத்துரையிடுக