நாசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் தீவிரவாதி சாத்வி பிரக்யாசிங் தாகூர் நாசிக் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதுகு தண்டவடத்தில் ஏற்பட்டிருந்த வலி காரணமாக நாசிக்கில் உள்ள ஆயுர்வேதா சேவா சங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாத்வி பாதுகாப்பு காரணங்களுக்காக திங்கள் கிழமை இரவு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
சாத்வி மருத்துவமனையில் இருந்தபோது, மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபாரதி, இந்து சாமியார் அசரம் பாபு ஆகியோர் அவரை சந்தித்தனர்.
மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சாத்வி, 2008ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முறையாக கைது செய்யப்படுவதற்கு முன், சட்டத்துக்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டிருந்தார். எனவே அவரை தற்போது பிணையில் விடுவிக்க வேண்டும் என்று கோரி, சாத்வியின் வழக்கறிஞர் கடந்த வாரம் மும்பை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்திருந்த பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத் தக்கது.
source:inneram
0 கருத்துகள்: on "மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி நாசிக் சிறைக்கு மாற்றம்!"
கருத்துரையிடுக