லக்னோ:உ.பி.மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற பராவஃபாத் ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் மோசமான வார்த்தைகளால் ஒருவரையொருவர் பேசியதால் ஏற்பட்ட மோதலில் ஆவேசமடைந்த கும்பல் ஒன்று சில கடைகளை தீயிட்டுக்கொழுத்தியது.
இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊரடங்கு உத்தரவை நகரின் பல பகுதிகளிலும் பிறப்பித்துள்ளது. மாநில உள்துறை செயலாளர் மஹேஷ் குப்தா தெரிவிக்கையில் உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆயுதம் தாங்கிய போலீஸ் படையை குவித்ததால் நிலைமைக் கட்டுகடங்காமல் போகாமல் தடுக்கப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைதுச்செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
செய்தி:twocirlcles.net
0 கருத்துகள்: on "பரேலியில் வன்முறையைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு"
கருத்துரையிடுக