3 மார்., 2010

சிமோகாவுக்குள் செல்லும் வழிகள் மூடல், கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் உடல் அடக்கம்

கடந்த திங்கள் கிழமை தஸ்லிமா நஸ்ரின் என்ற சர்ச்சைக்குரிய எழுத்தாளரின் கட்டுரை என்ற பெயரில் கன்னட மொழியில் கர்நாடகா மாநிலத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் திப்பு நகரைச் சார்ந்த ஸாதிக்(வயது 23) என்ற தொழிலாளர் ஒருவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்தார்.

மேலும் அப்துல் லத்தீஃப்(வயது 35) என்பவர் வன்முறை வெறிக்கும்பலின் தாக்குதலுக்கு பலியானார். இவர்களின் நல்லடக்கம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

மேலும் சிமோகாவிற்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சிமோகா முதல்வர் எடியூரப்பாவின் சொந்த நகராகும். துணைக் கமிஷனர் மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பங்கஜ் குமார் பாண்டே ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில் படுகாயமடைந்த 45 பேர் மெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
source:தி ஹிந்து

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிமோகாவுக்குள் செல்லும் வழிகள் மூடல், கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் உடல் அடக்கம்"

கருத்துரையிடுக