பத்தணம்திட்டா:இஸ்லாத்தைக் குறித்து அவதூறாக கருத்துக்களைக் கூறி புத்தகத்தை வெளியிடும், பிரச்சாரம் செய்யும் அனைவரையும் கைதுச்செய்து நடவடிக்கை மேற்க்கொள்ள எஸ்.டி.பி.ஐ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன் தினம் கேரளா மாநிலம் தொடுபுழாவில் நியூமேன் கல்லூரியில் நடைபெற்ற மாதிரித்தேர்வு வினாத்தாளில் அல்லாஹ்வைக் குறித்தும், நபிகளாரைக் குறித்தும் அவதூறான கேள்வியை தயார் செய்திருந்தார் கிறிஸ்தவரான ஜோசஃப் என்ற பேராசிரியர்.
இதனால் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது. இதுத் தொடர்பாக சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள் அறிக்கையில்,"மக்களிடையே நிலவும் சமாதான சூழலை தகர்க்கவும், மதத்துவேஷத்தை பரவச் செய்வதற்கும் முயற்சிக்கும் கிறிஸ்தவ சபைகளையும், சுவிசேஷ பணியாளர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். சுவிசேஷத்தின் மறைவில் ஆடம்பர கார்களும், பலமாடிக் கட்டிடங்களும் சொந்தமாக்கும் இவர்களின் அயல்நாட்டு தொடர்புக் குறித்தும் பொருளாதாரப் பின்னணிக் குறித்தும் விசாரிக்கவேண்டும்.
தலித்துகளையும், முஸ்லிம்களையும் தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாடும் காவல்துறையும், ஊடகங்களும் இவ்விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்? இதுக் கண்டிக்கத்தக்கதாகும்." என எஸ்.டி.பி.ஐ கேரள மாநிலத்தின் மாவட்ட கமிட்டிக் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்லாத்தை அவமதிப்போரின் பொருளாதார பின்னணியைக் குறித்து விசாரணை மேற்க்கொள்ள எஸ்.டி.பி.ஐ கோரிக்கை"
கருத்துரையிடுக