வாசிங்டண்:- யு.எஸ்,லிபியா தலைவருக்கெதிராக அளித்த கருத்தை வாபஸ் பெற்றது மட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்டது.
சுவிட்சர்லாந்து அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் மினாராக்கள் கட்டுவதற்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 200 மஸ்ஜிதுகள் உள்ளன. சுவிட்சர்லாந்தின் இத்தகைய அநியாய சட்டத்திற்கு வாடிகன் உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்திருந்தன.
சுவிட்சர்லாந்தில் 200 மஸ்ஜிதுகள் உள்ளன. சுவிட்சர்லாந்தின் இத்தகைய அநியாய சட்டத்திற்கு வாடிகன் உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்திருந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் லிபியாவின் தலைநகர் திரிபோலியில் பென்காஸி சதுக்கத்தில் நடைபெற்ற நபிகளாரின் பிறந்த நாள் பேரணியில் உரையாற்றும் பொழுது லிபியா அதிபர் முஅம்மர் கடாஃபி சுவிட்சர்லாந்திற்கெதிராக எல்லாவிதமான அறப்போரையும் பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார். இஸ்லாம் விரோத நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் நாட்டுடன் உறவை மேற்க்கொள்ளும் நபர் மதவிரோதி என்றும் அவர் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் எதிரி என்றும் கடாஃபி சுட்டிக்காட்டியிருந்தார்.
லிபியாவின் தலைவர் முஅம்மர் கடாஃபி, சுவிட்சர்லாந்திற்கெதிரான அறப்போருக்கு அழைத்ததை தொடர்ந்து, அமெரிக்க செய்தி தொடர்பாளர் க்ரோவ்லி கடாஃபியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, லிபியாவின் அமெரிக்க தூதர், லிபியா அமெரிக்காவிடம் சுமூக உறவு வைக்க விரும்புவதாகவும் ஆனால் தன் தலைவர் அவமானப்படுத்தப் படுவதை அந்நாடு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஜிஹாத் என்றால் ஆயுத போர் என்று தான் நினைத்து விட்டதாகவும், கடாஃபிக்கு ஏதிராக தான் கூறிய கருத்துக்கள், தன்னுடைய சொந்த கருத்துகள் என்றும், இதை அமெரிக்காவின் கருத்து என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று க்ரோவ்லி கேட்டுக்கொண்டார்.
மேலும், தன் சொந்த கருத்தை லிபியாவின் தலைவருக்கெதிராக தனிப்பட்ட முறையில் விளங்கிக் கொள்ளப்பட்டால், அதற்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்காவின் கருத்தை தொடர்ந்து, லிபியா ஜிஹாதுக்கான உண்மையான அர்த்தத்தை விளக்கிய பின், அமெரிக்காவின் இந்த மன்னிப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source:Siasat
0 கருத்துகள்: on "லிபியா விவகாரம்:மன்னிப்பு கேட்டது அமெரிக்கா"
கருத்துரையிடுக