சூரத்:மாநிலத்தின் பாதுகாப்பில் இஸ்ரேல் போன்ற நாட்டின் சேவை, குஜராத்துக்கு அதிகம் தேவை என்று கூறுகிறார், இஸ்ரேலின் கவுன்சில் ஜெனரல் ஒர்னா சகிவ்.
1600கி.மீ கடல் எல்லையை கொண்ட குஜராத், தீவிரவாதிகளின் நிரந்தர குறியாக இருப்பதாகவும், இஸ்ரேலிய நிறுவனங்கள் இதற்காக நிறைய தீர்வுகள் வைதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2007ல், யு.எஸ் மற்றும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்திடப் பட்டதாகவும், இதன் மூலம் அனைத்து விதமான தீவிரவாதிகளை கையாளும் திறனுள்ளதாகவும், இதேபோல், இந்தியாவுடனும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் தாங்கள் சேவைக்கு தாயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குஜராத்தில், இஸ்ரேலிய நிபுணர்கள் தற்ப்போது முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஆனால் அவர்களின் பெயர்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
எது எப்படி இருப்பினும் ஃபாசிச குஜராத் அரசு,இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பதனால், எதிர்காலத்தில் அது இந்தியாவிற்கே பெரும் அச்சுறுத்தலாக திகழலாம் என்ற ஒரு கருத்து மக்களிடம் இருப்பதை காணமுடிகிறது.
source:times ofi ndia
0 கருத்துகள்: on ""குஜராத்தின் பாதுகாப்பிற்கு எங்கள் பங்கு மிகவும் அவசியம்" – இஸ்ரேல்"
கருத்துரையிடுக