15 மார்., 2010

"சார்,வேண்டாம் நான் தீவிரவாதி அல்ல!" என்று கதறியும் A.T.S இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட சூரத் போலீஸ் துணைக் கமிஷ்னர்

சூரத்:போலீஸ் துணை கமிஷ்னர் சுபாஷ் த்ரிவேதி தன்னைச் சுட்ட போது "சார், வேண்டாம் நான் தீவிரவாதி இல்லை என்று நான் கதறினேன்" என்று தெரிவிக்கிறார் ஏ.டி.எஸ் இன்ஸ்பெக்டர் சபீர் அலி சையது.

கடந்த மாதம் 24ம் தேதியன்று, சூரத் விமானநிலைய நெடுச்சாலையில் தீவிரவாதத்தை தடுக்கும் சூழ்நிலையை கொண்டு ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகையில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், சூரத் துணைக் கமிஷ்னர் சுபாஷ் த்ரிவேதி, சபீரை அடிவயிற்றுப் பகுதியில் இரண்டு முறை சுட்டதாகவும், "நான் எப்படி சுடப்பட்டேன்?, ஏதற்காக சுடப்பட்டேன்? என்று என்னால் யோசித்துக் கூட பார்க்க இயலவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தார் சபீர்.

போலீஸ் ஒத்திகையை பற்றி மேலும் அவர் விளக்குகையில், ஒவ்வொரு காவலருடைய பணிகளை மிக அழகாக திட்டம் தீட்டப்பட்டு கற்பிக்கப்பட்டதாகவும், தான் பார்வையாளராக நியமிக்கப்பட்டதாகவும், ஒத்திகையில் கமாண்டோக்கள் செய்த தவறுகளை சுட்டிக் காண்பிப்பதே தனது பணியாக இருந்ததாகவும், அதுபோல், டி.ஜி.பி மற்றும் சில அதிகாரிகள் டாக்டர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஒத்திகை குறித்து அவர் தெரிவிக்கையில், "ஒரு பேருந்தை பயணிகளுடன் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பது எப்படி? என்ற அந்த ஒத்திகையில், நான் அந்தப் பேருந்தில் நின்று கொண்டிருக்கும் சமயத்தில், சுபாஷ் என்னை இழுத்துப் பிடித்ததார், அப்போது நான் சார், வேண்டாம் நான் தீவிரவாதி அல்ல, பார்வையாளர் தான் என்று கதறியபொழுது ,அவர் என்னை கவனிக்க மறுத்துவிட்டார். எங்கள் இருவருக்குமிடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது, நான் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கையில், டி.ஜி.பி தன் கைத்துப்பாக்கியால் என்னை அடிவயிற்றில் சுட்டதால், நான் சுய நினைவில்லாமல் மயக்கமுற்று விழுந்தேன்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.

அந்த 38 காலிபர் புல்லட் தன் அடிவயிற்றில் சுட்டதில் பின்புறம் இடுப்பு வழியாக வெளியேறியது என்று உயிருக்குப் போராடி குணமடைந்து வரும் சபீர் தெரிவித்தார். இதில் ஆச்சிரியமானது என்னவென்றால், ஒத்திகையில் டி.ஜி.பி சுபாஷிற்க்கு தீவிரவாதியை பிடிக்கும் வேலையை கூட கொடுக்கப்படவில்லை மாறாக அவர் ஒரு மருத்துவராகவே இருந்தார். இதனை சூரத் போலிஸ் கமிஷ்னர் சிவானந்த் ஜா உறுதி செய்தார்.

ஒத்திகையில் டாக்டராக இருந்த சுபாஷுக்கு துப்பாக்கி எடுத்து செல்ல வேன்டிய அவசியமே இல்லை, அப்படியே எடுத்துச் சென்றாலும் தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியை ஒத்திகையில் பயன்படுத்துவதற்கு என்ன நேர்ந்தது? இச்சம்பவத்தைக் குறித்து, சுபாஷ் திர்வேதியிடம் கேட்கப்பட்ட போது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். உம்ரா காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷ்னர் ஜா மற்றும் ஏ.டி.எஸ் தலைவர் அஜய் இவ்விசாரணைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மற்றொரு அதிகாரி கான்ட்வாவாலா கூறுகையில் இது ஒரு விபத்து என்றும் உறுதியான தகவல் விசாரணைக்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.
source:in.com

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on ""சார்,வேண்டாம் நான் தீவிரவாதி அல்ல!" என்று கதறியும் A.T.S இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட சூரத் போலீஸ் துணைக் கமிஷ்னர்"

sumaiya சொன்னது…

முஸ்லிம்கள் என்றால் குறிவைத்து தாக்கப்படும் அநியாயம் நாட்டில் இது போல் பல்வேறு இடங்களில் நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.அதற்கு காரணம்,நம்மை பற்றி குழப்பவாதிகள் செய்யும் தவறான பிரச்சாரம் தான்!அதை ஒழிக்க நாம் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும்!

கருத்துரையிடுக