அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக்கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம்.காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், பாவா ஹாஜி, அப்துல் கரீம், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

0 கருத்துகள்: on "அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பிறைமேடை மாதமிரு முறை இதழ் வெளியீடு"
கருத்துரையிடுக