அஹ்மதாபாத்:குஜராத் சுற்றுலாத் துறையின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதன் பெயரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தனிமைப் படுத்துபவர்கள் தாலிபான்களாவர் என குஜராத்தில் முஸ்லிம்களை நரவேட்டையாடுவதற்கு தலைமைத் தாங்கிய மோடி தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
மேலும் அவர் கூறுகிறார்: "குஜராத் எதிர்ப்பு அணுகுமுறையின் மூலம் எதிர்க்கட்சியினர் சாதாரண அறிவும் இழந்துள்ளனர். தீண்டாமையை வெளிப்படுத்துபவர்கள் தாலிபானிசத்தின் ஒரு பிரிவினர். பல இடங்களிலிருந்து விமர்சனங்கள் எழுந்தபொழுதும் பச்சனைப் போன்ற ஒரு சிறந்த நடிகர் குஜராத் சுற்றுலாத் துறையின் தூதர் என்ற ப்ராண்ட் தொடர்வது மிகவும் பாராட்டிற்குரிய விஷயம்." என்றார்.
பச்சனை மும்பையில் கடல் பாலம் திறப்பு விழாவின் போது அழைத்ததற்கு காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது. மஹாராஷ்ட்ரா முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனை புகழ்த்திவிட்டு தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
பூமிதினத்தையொட்டி டெல்லியில் ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியில் அமிதாப் மகன் அபிஷேக்கின் புகைப்படம் பதிக்கப்பட்ட பேனர்களை காங்கிரஸ் நீக்கியதற்குபின் தான் மோடி இந்த விமர்சனத்தை கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமிதாப் பச்சனை எதிர்ப்பவர்கள் தாலிபான்களாவர்- மோடி"
கருத்துரையிடுக