
இரண்டு நாட்களுக்கு முன்பு இரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்குதான் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் கெ.ரோசய்யா சட்டசபையில் தெரிவித்தார்.
இதுக்குறித்து ரோசய்யா சட்டசபையில் தெரிவித்ததாவது:
"உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தொடர்புக் கொண்டு துணை ராணுவப்படையை அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறையில் நடந்த கல்வீச்சில் 36 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 70 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மண்டல 18 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் கோஷாமால் டிவிசனில் உட்பட்ட நான்கு ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு நிலைமைகளைப் பற்றிக் கேட்டு அறிந்தார். சமாதானம் நிலை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள அவர் என்னிடம் கூறினார்." என்றார் அவர்.
உள்துறை அமைச்சர் ஸபிதா ரெட்டி சம்பவ இடத்தை நேற்றுப் பார்வையிட்டார். வன்முறை சம்பவங்களைக் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரியபொழுதும் சபாநாயகர் என்.கிரண்குமார் அனுமதி வழங்கவில்லை.
மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்கு செல்லமுடியாத சூழல் நிலவுவதாக மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அக்பருத்தீன் உவைஸி தெரிவித்தார். இவ்விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க வேண்டுமென்றும், தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றவேண்டும் எனவும், நகரத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை போதாது எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹைதராபாத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன"
கருத்துரையிடுக