ஹைதராபாத்:கடந்த வாரம், முஸ்லீம்களுக்கு உச்சநீதி மன்றம் 4% இடஒதுக்கீடு ஒப்புதல் அளித்ததையடுத்து, வருடத்திற்கு சுமார் 11,000 முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசு கல்லூரிகளில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆந்தரா சட்டசபையில் சனிக்கிழமை அன்று விவாதம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ரோசைய்யா, முஸ்லீம்களுக்கு அரசு துறைகளிலும் நான்கு சதவீதம் வேலை கிடைக்கும் வகையில், விரைவில் ஆந்திரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வழிவகைச் செய்யும் என்றார்.
இதனையடுத்து, எதிர்கட்சி தலைவர்கள் திரு.நாயுடு, வங்க கீதா மற்றும் கம்யயூனிஸ்ட் தலைவர்கள் இடஒதுக்கீடு சம்மந்தமாக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய, திரு.சந்திரபாபு நாயுடு, முஸ்லீம்கள் ஜனத்தொகை அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடே சரியானது என்றும் இதை பஞ்சாயத்துகளிலாவது அமல் படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
0 கருத்துகள்: on "ஆந்திரா:4சதவீத இடஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 11,000 முஸ்லீம் இளைஞர்கள் பயனடைவார்கள்"
கருத்துரையிடுக