இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தையான அப்துல் காதிர் கானை சுதந்திரமாக நடமாட பாகிஸ்தான் லாஹோர் உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
அதேவேளையில், அணு ஆயுத ரகசியங்களைக் குறித்தும், செறிவூட்டுதலைக் குறித்தும் ஊடகங்களிடம் பேசக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.
கானிற்கெதிரான குற்றச்சாட்டை தள்ளுபடிச் செய்துவிட்டு இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அளித்த நேர்முகத்தில் அணு ஆயுதங்களைக் குறித்த விபரங்களை கான் வெளிப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து அரசு அப்துல் காதிர்கானுக்கெதிராக புகார்மனு அளித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அப்துல் காதிர் கான் சுதந்திரமாக நடமாட பாக்.நீதிமன்றம் அனுமதி"
கருத்துரையிடுக