காஸ்ஸா:ஏராளமான இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் காஸ்ஸா எல்லையை நோக்கி நகருவதாக செய்திகள் கூறுகின்றன. காஸ்ஸா எல்லையில் 500 மீட்டர் தொலைவில் புல்டோஸர் உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் நிற்பதாகவும், கிடங்குகளை நிர்மாணிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பிரதேசத்திலிருந்து காலிச் செய்ய விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் அத்துமீறி நுழைவதற்கான முயற்சியை ஹமாஸ் போராளிகள் தோல்வியுறச் செய்ததையடுத்து எல்லைப் பகுதியான கான் யூனுசிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கியது. அப்பொழுது நடந்த மோதலில் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது மற்றொரு தாக்குதலுக்கு தயாராகுவதாக தகவல் கூறுகிறது. காஸ்ஸா எல்லையில் சுரங்கத்தை நோக்கி நேற்றும் இஸ்ரேலிய போர்விமானங்கள் தாக்குதல் நடத்தின.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸா எல்லையில் முகாமிட்டுள்ளதாக தகவல்"
கருத்துரையிடுக