டெல்லி: மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2 நாள் பெரும் அமளிக்குப் பின் இன்று ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, சிவசேனா, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஓட்டெடுப்பை புறக்கணித்தது. ராஜ்யசபாவில் அந்தக் கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ளனர். அதே போல பகுஜன் சமாஜ் கட்சியினரும் வெளிநடப்பு செய்து ஓட்டெடுப்பை புறக்கணித்தனர்.
மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்பி்க்களும் எதிராக 1 எம்பியும் வாக்களித்தனர். மற்ற எம்பிக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டனர். (ராஜ்யசபாவில் மொத்தம் 233 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 155 எம்பி்க்கள் ஆதரவு இருந்தால் அது மூன்றில் ஒரு பங்கு மெஜாரிட்டியாகும்)
source:thatstamil
2 கருத்துகள்: on "மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்"
அது சரி...செய்தியை மட்டும் வெளியிட்டா எப்படி ? உங்க கருத்து என்ன ? அதை சொல்லிப்போடுங்க
உண்மையான காரணம் என்ன ?
ஒரு ஓட்டெடுப்பு
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html
கருத்துரையிடுக