ஜெய்பூர்:அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மிஷ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டுமாத நீண்ட பிரச்சாரத்தின் ஒரு பாகமாக முஸாஃபர் கானாவிலிருந்து ஆரம்பித்த இப்பேரணி ஜெய்ப்பூர் கர்பலா மைதானத்தில் முடிவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸஹாரா க்ரூப்பின் உருது பிரிவு எடிட்டர் அஸீஸ் பர்ணி முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டார். முஸ்லிம்களை புறக்கணிக்கும் அணுகுமுறை அரசியல் சட்டத்தின் அந்தஸ்திற்கு உகந்ததல்ல என்று அஸீஸ் பர்ணி தனது உரையில் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச்செயலாளர் ஷெரீஃப், மாநிலத்தலைவர் ஹாஃபிஸ் ஹனீஃப், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் உஸ்மான் பேக், அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் அர்ஷிகான், அம்பேத்கர் சமாஜ் கட்சி தலைவர் பாய் தேஜ் சிங், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் கண்வீனர் ஹஸன் கோரி, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், மேகவால் மகாசபா மாநிலத்தலைவர் டாக்டர் இந்தராஜ் சிங் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: ஜெய்பூர் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு"
கருத்துரையிடுக