10 மார்., 2010

எம்.எஃப்.ஹுஸைனுக்கு கத்தர் குடியுரிமை வழங்கியது ஹிந்துக்களின் வெற்றியாம்: பிரவீன் தொகாடியாவின் கூற்று

ஆஸம்கர்:பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு கத்தர் நாடு குடியுரிமை வழங்கியது ஹிந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என்று விசுவஹிந்து பரிஷத் என்ற ஹிந்துத் தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

தனது ஓவியங்கள் மூலமாக ஹிந்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் எதிராக ஜிஹாத் நடத்தியவர் எம்.எஃப்.ஹுசைன் என்று தொகாடியா கூறுகிறார்.

காமக்களியாட்டம் நடத்தி மாட்டிக்கொண்ட நித்யானந்தா சுவாமியை ஆதரிக்கவும் தொகாடியா தயங்கவில்லை. அவர் நிரபராதி என்றும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் எதுவும் செய்யலாம் எனவும் கூறுகிறார் தொகாடியா.
பெண்கள் இடஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடுச் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தார் தொகாடியா.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எம்.எஃப்.ஹுஸைனுக்கு கத்தர் குடியுரிமை வழங்கியது ஹிந்துக்களின் வெற்றியாம்: பிரவீன் தொகாடியாவின் கூற்று"

கருத்துரையிடுக