புதுடெல்லி:தண்டனைக் காலம் முடிந்து சிறையில் உள்ள 16 பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமென சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமமான அளவில் பாகிஸ்தான் இந்திய சிறைக் கைதிகளை ஒப்படைக்க தயாரானால் தான் பாகிஸ்தானியர்களை ஒப்படைக்க முடியும் என்ற மத்திய அரசின் உத்தரவை தள்ளுபடிச் செய்துக் கொண்டு நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஆர்.எம்.லோடா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது.
சட்டமும், நீதியும் நிலை நிற்கும் ஒரு நாட்டில் வாழ்வதற்கான உரிமைக்குத் தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர வேறொரு நாட்டின் நடவடிக்கையுடன் அதனை தொடர்புபடுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
"அரசியல் சட்டத்தின்படி தண்டனைக் காலம் முடிந்தப் பின்னர் ஒருவரை ஒரு நிமிடம் கூட சிறையிலடைப்பது சட்டவிரோதமாகும். ஆனால், பாகிஸ்தான் சிறைக்கைதிகளை ஒப்படைக்கும் வரை பாகிஸ்தானியர்களை ஒப்படைக்கக்கூடாது என்று நீங்கள் (மத்திய அரசு) கூறுகின்றீர்கள். அவ்வாறெனில் பாகிஸ்தான் முறையாக செயல்படாததால் நாமும் அவ்வாறு செயல்பட முடியுமா?". என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
ஜம்மு-கஷ்மீர் பாந்தேர்ஸ் கட்சியின் தலைவர் பீம்சிங் அளித்த மனுவை விசாரணைக்கு எடுக்கும் பொழுதுதான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆக்ரா, ஜோட்பூர், வாரணாசி, திஹார் ஆகிய சிறைகளில் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் 16 பாகிஸ்தானியர்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "16 பாகிஸ்தானியர்களை உடனடியாக விடுதலைச் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு"
கருத்துரையிடுக