ரியோடி ஜெனீரா:பருத்தி விவசாயிகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக ஊக்கத் தொகை அறிவித்ததைக் கண்டித்து ஏராளமான அமெரிக்க தயாரிப்புகளுக்கு பிரேசில் தடை ஏற்படுத்தியுள்ளது. இதனை உலக வியாபார கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது.
தடையின் ஒரு பகுதியாக 100 அமெரிக்க பொருட்களுக்கு 30 நாட்களுக்கு பிரேசில் சிறப்பு இறக்குமதி சுங்கவரி விதித்துள்ளது. கார்களுக்கு 25 சதவீதமும், பால் பொடிக்கு 20 சதவீதமும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பருத்திக்கும், பருத்தி தயாரிப்புகளுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பருத்தி தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான டாலர் சட்டவிரோதமாக உதவியளித்தது பிரேசிலின் பருத்தி விவசாயிகளை பாதித்ததைத் தொடர்ந்து தான் இந்த தடை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்க தயாரிப்புகளுக்கு எதிராக பிரேசில் வியாபாரத் தடை"
கருத்துரையிடுக