புதுடெல்லி:பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃப் அமீனும்,முஹம்மது ஷாஜிதும் கொல்லப்படுவதற்கு முன் கடும் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டார்கள் என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர் தெரிவிக்கிறது.
நீண்ட போராட்டத்திற்கு பின் தகவல் அறியும் சட்டத்தின்படி கிடைத்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் நகலில் இருவரும் கொல்லப்பட்டது என்கவுண்டரில் என்ற போலீஸின் கூற்றை பொய்ப்பிக்கும் விவரங்கள் காணப்படுகின்றன.
தீவிரத்தாக்குதல் நடத்தியவர்கள் என குற்றஞ் சுமத்தி காவல்துறையால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸம்கரைச் சார்ந்த இருவரின் உடலை குளிப்பாட்டும் பொழுது கடினமான சித்திரவதைச் செய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
போலீஸ் கூறுவதைப் போல் என்கவுண்டரில் கொல்லப்பட்டிருந்தால் எவ்வாறு இந்தக் காயங்கள் ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் பாட்லா ஹவுஸில் என்கவுண்டர் நடந்த அன்றே சந்தேகங்கள் எழுந்தன. இறந்த உடல்களில் காணப்பட்ட அடையாளங்களும், உண்மை கண்டறியும் குழுக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நடத்திய விசாரணையில் இருவரையும் போலீஸ் பிடித்து நிறுத்தி சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிக் குண்டுகள் ஷாஜிதின் தலைக்கு மேல் பகுதியில் துளைத்திருந்ததற்கான அடையாளத்தை அவருடைய உடலை குளிப்பாட்டும் பொழுது உறவினர்கள் ரகசியமாக எடுத்த போட்டோக்களில் காணப்படுகிறது. குனிந்திருக்கச் செய்து இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அன்றே இதுத்தொடர்பாக ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டிருந்தது.
அது உண்மை என்பதை இப்பொழுது வெளிவந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது. தகவல் அறியும் பணியில் ஈடுபட்டுள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா மாணவரான அப்ரோஸ் ஆலம் ஷாஹிலின் கடுமையான போராட்டத்திற்கு பலனாக பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இருவரின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் நகல்கள் வெளியிடப்பட்டது.
இதற்காக டெல்லி போலீஸ், ஐ.ஐ.ஐ.எம்.எஸ், மத்திய தகவல் உரிமை கமிஷன் ஆகியவற்றின் வழியாகத்தான் ஷாஹிலுக்கு போஸ்ட் மார்ட்டம் நகல் வழங்கப்பட்டது.
ஆதிஃப் அமீனின் இரண்டு பக்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட காயங்களால் இரத்தம் வெளியேறியது மரணத்திற்கு காரணமானதாக கூறப்பட்டுள்ளது. 24 வயது ஆதிஃப் அமீனின் உடலில் 21 காயங்களில் வெடிக்குண்டுமூலம் ஏற்பட்டது 16 காயங்கள் மட்டுமே. ஏழாம் நம்பர் காயம் கனத்த பொருள் ஒன்றினால் தாக்கியதால் ஏற்பட்டது என அறிக்கை கூறுகிறது.
அதேப்போல் தலையின் மேல் பாகத்தில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகளின் காயம் ஏற்பட்ட ஷாஜிதிற்கு கடுமையான சித்திரவதைச் செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. தலையில் குண்டடிப்பட்டு மூளைக்கு சிதைவு ஏற்பட்டதால் மரணம் நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது. ஷாஜிதின் உடலில் காணப்பட்ட 14 காயங்களில் 12 மட்டுமே துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்பட்டது. 2 கடினமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்டது, என அறிக்கை கூறுகிறது.
போலி என்கவுண்டரில் சம்பவத்தில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி சர்மாவிற்கு இடது தோளிலும், இடது கையின் மேல்பாகத்திலும் துப்பாக்கிக்குண்டு துளைத்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. குண்டடிப்பட்ட பிறகு இரண்டு போலீசாரின் துணையோடு மருத்துவமனைக்கு நடந்துச் சென்ற சர்மா மரணமடைந்ததும் சந்தேகத்தை கிளப்பியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாட்லாஹவுஸ் என்கவுண்டர்:கடும் சித்தரவதைக்குப் பின் ஆதிஃபும்,ஷாஹிதும் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்"
கருத்துரையிடுக