ஷிகாகோ:மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்க குடிமகன் டேவிட் கோல்மான் ஹெட்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
நேற்று ஷிகாகோ நீதிமன்றத்தில் ஆஜரான ஹெட்லி தனக்குதிரான 12 குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டால் மரணத் தண்டனையிலிருந்து தப்ப முடியும்.
மும்பைத் தாக்குதல் திட்டமிட்டது மட்டுமல்லாமல் இறைத்தூதரின் கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஆகியவற்றின் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 3- ஆம் தேதி எஃப்.பி.ஐ ஹெட்லியை கைதுச் செய்தது.
அதேவேளையில், ஷிகாகோ நீதிமன்றம் ஹெட்லிக்கு எளிதான தண்டனையை அளித்தால் இந்தியா அதனை கடுமையாக எதிர்க்கும் என இந்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார். சி.ஐ.ஏ ஏஜண்ட் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஹெட்லி கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க குற்றத்தை ஒப்புக்கொள்வார் என முன்னரே கூறப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "டேவிட் ஹெட்லி குற்றத்தை ஒப்புக்கொண்டார்"
கருத்துரையிடுக