வாரநாசி:அனைத்து இந்திய இத்திஹாத்தை-இ-மிலாத் கவுன்சில் தலைவர் மவ்லானா டவ்கீர் ராஜா, பாரில்லி அமைப்பால் கைது செய்யப் பட்டதையடுத்து, ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் தன் கன்டனத்தை தெரிவித்தது மட்டுமல்லமல் உடனே மவ்லானா அவர்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, உலமா கவுன்சில் தலைவர் மவ்லானா அமீர் ரஷாதி கூறுகையில், மவ்லானா ராஜா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், இல்லையேல் தாங்கள் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்த வேண்டியது வரும் என்று எச்சரித்தார்.
மேலும், மாநில அமைப்பு உண்மையான ரவுடிகளை மற்றும் குற்றவாளிகளை விட்டுவிட்டு ஒரு மார்க்க அறிஞர் மேல் பொய்யான வழக்கை ஜோடித்துள்ளது என்றார்.
மார்ச் 2ம் தேதி மதக்கலவரம் நடந்ததையடுத்து, ராஜா கைது செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source:TOI
0 கருத்துகள்: on "ராஜாவை விடுதலை செய்ய உலமா கவுன்சில் கோரிக்கை"
கருத்துரையிடுக