டெல்அவீவ்:அமெரிக்க பெண் சமூக சேவகரான ரெய்சல் கோரி கடந்த 2003 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவ புல்டோஸரால் இடித்துத் தள்ளப்பட்டு கொலைச் செய்யப்பட்டார்.
இதற்கெதிராகத்தான் அவருடைய குடும்பத்தினர் 32,400 டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.
ஃபலஸ்தீனில் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் தான் ரெய்சல் கோரி. ஃபலஸ்தீனில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் வீடுகளை தகர்க்கும் இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கியவர் கோரி.
இஸ்ரேல் ராணுவத்திற் கெதிரான போராட்டத்தில் கொல்லப்பட்ட ஏராளமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவர் தான் ரெய்சல் கோரி. ஆனால் இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ரெய்சல் கோரி போராளிகளின் ரகசிய இடங்களை தாக்கும் பொழுது காங்கிரீட் ஸ்லாப் மோதி மரணமடைந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ரெய்சல் கோரியின் குடும்பத்தினர் நேரடி சாட்சிகள் மூலம் மறுத்துள்ளனர்.
சமீபத்தில் கஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூரங்களுக் கெதிராக ஐ.நா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்க சமூக சேவகியின் மரணம்: இஸ்ரேலுக்கெதிராக வழக்கு"
கருத்துரையிடுக